தனது அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் நயன்தாரா.!

நடிகை நயன்தாரா நடித்து வெளியாக காத்திருக்கும் படம் தான் `கொலையுதிர் காலம்’ படம். இந்த படத்தை சக்ரி டோலட்டி இயக்கியிருக்கிறார். இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் என்ற பாணியில் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. இது ஹாலிவுட் படமான `ஹஷ்’ என்ற படத்தினை தழுவி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகனின் தயாரிப்பில், உருவாகும் இந்த படம் கோரி கெர்யக் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது. படத்தொகுப்பை ராமேஸ்வர் எஸ்.பகத் கவனிக்கிறார்.

முன்னதாக இந்த படம் கடந்த மாதம் 14-ந் தேதியே வெளியாக இருந்தது. இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் பாலாஜி குமார் இந்த படத்தை, கொலையுதிர்காலம் என்ற டைட்டிலுடன் வெளியிடக்கூடாது என வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்தது.

தயாரிப்பாளர் மதியழகன் இந்த தடையை நீக்க கோரி மனுதாக்கல் செய்தார். இந்த தலைப்பிற்கு காப்புரிமை இல்லாத இல்லாத காரணத்தால் யார் வேண்டுமானாலும் பயன்படுத்த உரிமை இருக்கிறது எனக்கூறி படத்துக்கு நீதிமன்றம் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டது.

இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற 26-ந் தேதி ரிலீசாகும் என தெரிகிறது.