வாழ்நாள் முழுவதும் தண்ணீர் அருந்தாத உயிரினம்

பொதுவாகவே உலகில் அனைத்து உயிரினங்களின் நிலவுகைக்கும் தண்ணீர் அத்தியாவசியமானது. நீர் இல்லாத பட்சத்தில் எந்த உயிரினமும் உயில் வாழவே முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.

மனிதர்களை பொருத்த வரையில் தண்ணீர் குடிப்பதற்கு மட்டுமன்றி பல்வேறு சுகாதார தேவைகளை பூர்த்தி செய்யவும் தண்ணீர் இன்றியமையாத விடயமாக காணப்படுகின்றது.

பருகுவதற்கு மாத்திரம் நீர் இருக்கும் பட்சத்திலம் மனிதர்களின் வாழ்க்கை சாத்தியமற்றது என கூறினால் மிகையாகாது.

ஆனால் வாழ்நாள் முழுதும் தண்ணீர் பருகாத விலங்கு ஒன்று இருக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் அந்த உயிரினம் தான் கங்காரு எலி.

ஏன் தண்ணீர் அருந்துவது கிடையாது?
விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையில் இந்த இனத்தை சேர்ந்த எலிகள், தன் வாழ்நாள் முழுவதும் நீர் அருந்துவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த இன கங்காரு எலிகள் பாலைவனங்களில் வாழ்கின்றன. அவற்றின் செரிமான அமைப்பு சீறான முறையில் இயங்குவதற்கு தண்ணீர் அவசியம் அற்றது என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாகும்.

மிகவும் வேகமாக ஓடும் திறன் கொண்ட கங்காரு எலிகள் ஒரு நொடியில் சுமார் 6 மீட்டர் தூரம் வரை செல்லக்கூடியது.

இவ்வகை எலிகளின் மொத்த நீளம் 38 செ.மீ ஆகும். அதில் வால் மட்டும் 20 செ.மீ. வரை வளரக்கூடியது. இவை நீண்ட கால்களை கொண்டிருப்பதால் கங்காரு எலி என குறிப்பிடப்படுகின்றது.

அணில் மாதிரி கொரிக்கும் விலங்கு வகையைச் சேர்ந்தவை இந்த கங்காரு எலிகள். பழ விதைகள் தான் முக்கியமான உணவு என்றாலும் எங்காவது எப்போதாவது கிடைக்கும் இலைகளையும், பூச்சிகளையும்கூட உணவாக்கிக்கொள்ளும்.

வருங்காலத்துக்கு உணவு சேகரிப்பதில் இந்தக் கங்காரு எலிகள் மிகவும் சிறப்பாக செயற்படும். போதுமான அளவுக்கு விதைகளைக் கொண்டுவந்து முன்னெச்சரிக்கையாகச் சேமித்து வைத்துக்கொள்ளும்.

பல எலிகள் சேர்ந்து வாழும் வளைகள் என்றால் பெரிய தானியக் களஞ்சியமே வளைக்குள் இருக்கும்.இந்தளவு உணவுகளை சேமித்து வைக்கும் ஆற்றல் கொண்டவை.