காதலர் தினம் எப்படி வந்தது? காதலர் தினத்தின் கதை.. வெளியான முக்கிய தகவல்!

பிப்ரவரி மாதம் பிறந்ததுமே சட்டென்று நினைவுக்கு வருவது காதலர் தினம்தான். காதலிக்கு பரிசு வாங்கவும், காதலை வெளிப்படுத்தவும் இதை ஒரு சந்தர்ப்பமாக இளைஞர்கள் பலர் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

எப்படி வந்தது காதலர் தினம்?

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. லூப்பர்காலியா என்ற திருவிழாவை ரோமானியர்கள் கொண்டாடி வந்தனர். பிப்ரவரி 14ம் தேதி மத்திய இங்கிலாந்தில் பறவைகள் மூலம் ஜோடிகளைத் தேர்வு செய்த ஆங்கிலேய பழமைவாதிகளின் இந்த நாளையே காதலர் தினமாக கொண்டாடுவதாக சிலர் கூறுகின்றனர்.

இருப்பினும், ரோமானிய அரசனின் ஆட்சிக் காலத்தில்தான் காதலர் தின கொண்டாட்டம் துவங்கியதற்கான சான்றுகள் உள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.கிளாடிஸ் மிமி தனது ஆட்சி காலத்தில் படைவீரர்களுக்கு முட்டாள் தனமாக உத்தரவுகள் பிறப்பிப்பதன் காரணமாக மக்கள் படையில் சேர தயக்கம் காட்டி உள்ளனர்.

ஒரு நாள் அமைச்சர்களை அழைத்து ரோமாபுரி நாட்டில் இனி எவருமே திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்றும், ஏற்கனவே நிச்சயித்த திருமணங்களும் ரத்து செய்யப்படுகிறது என்றும், மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும், மேலும் அவர்களை பொது இடத்தில் கல்லால் அடித்து தலை துண்டித்து கொல்லப்படுவார்கள் என்றும் உத்தரவு பிறப்பித்தாராம்.

இந்த அறிவிப்பை கேட்ட ரோமானிய மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். திருமணமானவர்கள் மனைவியை பிரிந்து வரத் தயங்குகிறார்கள். காதலிக்கும் வாலிபர்கள் காதலியை பிரிந்து வர தயங்குகின்றனர். இவை இரண்டும் இல்லாவிட்டால் படையில் சேர்வார்கள் என்று அரசன் நினைத்துள்ளார். ஆனால், ரோமானிய நாட்டு வாலண்டைன் என்ற பாதிரியார், அரசனின் அறிவிப்பை மீறி இரகசியமாகத் திருமணங்களை நடத்தி வைத்தார்.

காதலிக்கு அனுப்பிய முதல் வாழ்த்து :

இதை அறிந்த ரோமானிய அரசன் பாதிரியாரை கைது செய்து சிறையில் அடைத்து மரணதண்டனை விதித்தார். இந்த காலகட்டத்தில் சிறைக் காவலர் தலைவனின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும், வாலண்டைனுக்கும் காதல் மலர்ந்துள்ளது.

இதை அறிந்த சிறை துறைத் தலைவன் மகளை வீட்டுச் சிறையில் வைத்தான். அனைத்து காவலையும் மீறி காகித அட்டை ஒன்றின் மூலம் செய்தி அனுப்பினார் வாலண்டைன். அந்த செய்தியானது அஸ்டோரியசுக்கு 270வது வருடம் பிப்ரவரி மாதம் 14ம் தேதி அன்று வந்தடைந்தது.

அஸ்டோரியசு, கடிதத்தை படிக்கும் அதே நேரத்தில் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்திரவதை செய்த பின் வாலண்டைனின் தலை துண்டிக்கப்பட்டது.

வாலண்டைன் ரோம் மக்களின் மனங்களில் மறையாமல் நிறைந்திருந்தார். ரோமானிய சர்ச்சுகள் ஐரோப்பியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த போது ரூசூ39;பாகான்’ விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டது. இதுவே வாலண்டைன் தினமாகக் கொண்டாடப்பட்டது.

சுமார் 200 ஆண்டுகளுக்கு பின் போப்பாண்டவர் ஜெலாசியஸ் மி வாலண்டைனை புனிதராக அறிவித்தது. முதல் வாலண்டைன் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்…