இன்ஸ்டா பக்கமே உதர வைக்கும்.. வ்லாக் ப்ரோமோவிலேயே சூடேற்றும் ஷாலு ஷம்மு…

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2013 இல் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் தமிழில் வெளியாகியது. இந்த படத்தில் நகைச்சுவை நடிகராக சூரி நடித்து இருப்பார்.

இதில் ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக வரும் ஷாலு ஷம்மு சூரிக்கு ஜோடியாக இருப்பார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த சாலை சம்பவம் இதற்கு முன்பும் சில படங்களில் நடித்துள்ளார் ஆனால் இந்த படம் அளவிற்கு அவருக்கு பெயரைக் கொடுக்கவில்லை.

அதன் பின்னர் ஷாலு ஷம்மு திருட்டு பயலே, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் குத்து மற்றும் மிஸ்டர் லோக்கல் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது விஜய்சேதுபதி நடித்து பொன்ராம் இயக்கும் பவுடர் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது நடன வீடியோக்கள் உடற்பயிற்சி வீடியோக்கள் மற்றும் போட்டோ ஷூட் ஆகியவற்றை அவர் வெளியிட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று ஷாலு ஷம்மு தான் ஆரம்பித்திருக்கும் யூட்யூப் சேனலுக்காக வெளியிட்டுள்ள ப்ரோமோ வீடீயோ வைரலாகி வருகிறது.