மலையக ரயில் பயணிகளுக்கான அறிவிப்பு!

மலைகத்திற்கான ரயில்சேவைகள் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயில் வட்டவளை ரயில் நிலையம் அருகில் தடம்புரண்டுள்ளதன் காரணமாக ரயில்சேவைகள் இவ்வாறு தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.