சிவனொளிபாதமலை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்!

சிவனொளிபாத மலை பருவகாலத்தை முன்னிட்டு அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிவனடிபாத மலை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், எந்த காலமும் இல்லாத வகையில் இந்த முறை அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வருகை தருவதனால் நல்லதண்ணி நகரில் உள்ள அனைத்து விருந்தினர் விடுதிகளும் நிறைந்துள்ளனர்.

அத்துடன் அவர்களுக்கான முழுமையான பாதுகாப்பை பொலிஸார் வழங்கி வருவதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.

அதேபோல் உள்நாட்டு யாத்திரிகர்கள் இம்முறை சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய புகையிரதம் மற்றும் அரச பேருந்துகள் மூலமாகவும் அதிகளவில் வருகை தந்து விட்டு திரும்பியுள்ளனர்.

எதிர்வரும் மே மாதத்தில் வரும் பூரணை தினமான வைகாசி விசாக நாளுடன் சிவனடி பாத மலை பருவகாலம் நிறைவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.