60 ஆயிரம் தேனீக்களை முகத்தில் பரவிட்ட இளைஞர்.. இறுதியில் நடந்த சுவாரஸ்யம்..

60 ஆயிரம் தேனீக்களைக் கொண்டு முகத்தை மறைத்து கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்தவர் இளைஞரான நேட்சர் எம்.எஸ்(24) என்பவர் சிறுவயது முதலே இவருக்கு தேனீக்கள் என்றால் இவருக்கு மிகவும் பிரியம்.

தனது தந்தை மூலமாகவே தேனீக்கள் மீது ஆர்வம் மற்றும் காதல் ஏற்பட்டதாக கூறும் இவர் 60 ஆயிரம் தேனீக்களை முகத்தில் படரவிட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

முதலில் தனது நண்பர்கள் மத்தியில் பிரபலமாவதற்காக சிறுவயதில் தனது கை, உடல்களில் தேனீயை படரவிட்டு சாதனை செய்த இவர், சிறுவயதில்லையே அந்த மாநிலத்தில் மிகவும் பிரபலமாக பார்க்கப்பட்டார். தற்போது தேன் உற்பத்தி செய்துவரும் இவர், கடந்த 2018-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றார்.

தற்போது, 4 மணி நேரம் 10 நிமிடம் 5 வினாடிகள் தனது தலை, முகம் முழுவதும் 60 ஆயிரம் தேனீக்களை வைத்து மறைத்து சாதனை படைத்துள்ளார் இளைஞர். குறிப்பிட்ட அவரது சாதனை வீடியோ இதோ..