பிரபல நாடொன்றில் மூடப்படும் கனேடிய தூதரகம்

சூடான் நாட்டுக்கான கனடிய தூதரகம் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூடானில், இராணுவத்திற்கும் துணை இராணுவக் குழுக்களுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த மோதல் சம்பவங்களில் இதுவரையில் 185 பேர் கொல்லப்பட்டதுடன் 1100 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

சூடானுக்கான பயணங்களை தவிர்க்குமாறும், ஏற்கனவே அங்கு தங்கியிருப்போர் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறும் கனடிய அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

எத்தனை கனடியர்கள் சூடானில் உள்ளனர் என்பது பற்றியோ அவர்களை பாதுகாப்பாக எவ்வாறு அழைத்து வருவது என்பது பற்றியோ இதுவரையில் வெளிவிவகார அமைச்சு தகவல்களை வெளியிடவில்லை.

இதேவேளை, சூடானுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில் இடம்பெற்று வரும் கடுமையான மோதல்களின் காரணமாக அநேக நாடுகள் சூடான் தொடர்பில் பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.