வெளிநாட்டு திறன்மிகுப் பணியாளர்கள் தொடர்பில் கனடாவிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்பும் ஜேர்மனி

வெளிநாட்டு திறன்மிகுப் பணியாளர்களைக் கவர்வது எப்படி என்பதை கனடாவிடமிருந்து கற்றுக்கொள்ள ஜேர்மனி விரும்புகிறது.

வெளிநாட்டு திறன்மிகுப் பணியாளர்களைக் கவர்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதற்காக, ஜேர்மன் பெடரல் உள்துறை அமைச்சரான Nancy Faeserம், தொழிலாளர் துறை அமைச்சரான Hubertus Heilம், வரும் ஞாயிற்றுக்கிழமை கனடாவுக்குச் செல்ல இருக்கிறார்கள்.

அதன்படி அவர்கள் தொழிலாளர் சந்தை கொள்கைகள், புலம்பெயர்தல் மற்றும் பொது பாதுகாப்பு ஆகிய விடயங்கள் குறித்து கற்றுக்கொள்வதற்காக, கனேடிய அமைச்சர்களுடன் பல சந்திப்புகளை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

மேலும் ஒரு வெற்றிகரமான நாட்டின் மிகப்பெரிய பொறுப்புகளிலிருக்கும் பெடரல் அமைச்சர்கள், தாங்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என கருதும் ஒரு விடயத்தைக் கற்றுக்கொள்வதற்காக மற்றொரு நாட்டுக்கு பயணிக்க இருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது.