யாழில் போதை மாத்திரைகளை விற்றவர்கள் கைது!

யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தலமையில் ஆன யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலில் யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவினரும் இனைந்து நடத்திய சுற்று வளைப்பில் போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குருநகரை சேர்ந்த ஐவரும் யாழ்ப்பாணம் நாவாந்துறையை சேர்ந்த ஒருவரும் கைது செய்துள்ளனர் .
இவர்களுடைய வயது 18,19,20,21,நிரம்பியவர்கள் ஆகும் நிறைய காலமாக ஒரு வலயமைப்புக்குள் இருந்து பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த பொழுது இன்று சென் பற்றீஸ் பாடசாலை அருகாமையில் வியாபாரத்தில் ஈடுபடும் பொழுது யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இருவரை கைது செய்து யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவினருடன் இனைந்து விசாரனையை மேற்கொண்ட பொழுது குறித்த கைது இடம்பெற்றது.
ஒருவர் ஆட்டோவில் வியாபாரம் செய்யும் பொழுது மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவினரும் இணைந்து பொழுது நாவாந்துறை சந்தியில் ஆட்வோவை.விட்டு விட்டு ஓடும் பொழுது
300 போதை மாத்திரகைளுடன் கைது செய்தார்கள் மேலதிக விசாரனை
களை யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் முற்படுத்தபடுவார்கள்.