திருகோணமலையில் நேற்று மாலையிலிருந்து பொதுமக்கள் வீதியை மறித்து, டயர்களை எரித்து அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த போராட்டம் இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக திருகோணமலை – கண்டி பிரதான வீதியான அபயபுர சுற்று வளைவு சந்தியில் மூன்று பக்கமும் வீதித் தடை போடப்பட்டு மறிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் பேரூந்து ஒன்றினை வீதிக்கு குறுக்கே நிறுத்தி உப்புவெளி பகுதிக்குச் செல்லும் வீதியும் மறிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடைகள் , மற்றும் மத்திய மீன் சந்தை மூடப்பட்டு காணப்படுகின்றது.அத்தோடு திருகோணமலை மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் திருகோணமலை நகரிலுள்ள அரச அலுவலகங்களுக்கு இன்று காலை, தொழில் நிமிர்த்தம் சென்ற பலரும் திருப்பி அனுப்பப்பட்ட2தாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை தொடர்ந்தும் திருகோணமலையில் வீதித்தடைகள் போடப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.