யாழில் மாட்டுவண்டியில் பாடசாலை சென்ற ஆசிரியர்கள்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையிலுள்ள பிரபல பாடசாலையான யூனியன் கல்லூரியின் ஆசிரியர்கள் மாட்டு வண்டில்களில் இன்று பாடசாலைக்கு சென்றனர்.

எரிபொருள் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு ஆகியவற்றுக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அவர்கள் இவ்வாறு மாட்டுவண்டில்களில் பாடசாலைக்குச் சென்றனர்.

அதேவேளை நாட்டில் எரிபொருள் விலையேற்றம், தட்டுபாடு ஆகியவற்றுக்கு எதிராக இலங்கையின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.