இணையதளம் மூலம் பொதுமக்களிடம் நிதி திரட்டும் உக்ரைன்

உக்ரைனில் ரஷ்ய துருப்புக்களின் முன்னேற்றத்தை தடுக்க, புதிய போர் விமானங்களை வாங்க பொதுமக்களிடம் இருந்து நிதி கோரப்படுகிறது.

உக்ரைனில் போர் தொடங்கிய ஆரம்ப கட்டத்திலிருந்தே, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பல உக்ரைன் ராணுவத்திற்கு போர் விமானங்களை வழங்குவதாக அறிவித்தன.

ஆனால் அவ்வாறு செய்தால், ரஷ்யாவுடனான பதட்டம் மேலும் அதிகரிக்கும், உலகப்போர் மூளும் என்ற கவலையால் அமெரிக்கா அதை அனுமதிக்க மறுத்ததால் அந்த திட்டம் பலனளிக்கவில்லை.

இந்த நிலையில், ஜெட் போர் விமானங்களை வாங்கிட பொதுமக்கள் நிதி அளித்து உதவுமாறு இணையதளத்தில் உக்ரைன் பிரச்சாரம் செய்து வருகிறது. எனக்கு ஒரு போர் ஜெட் விமானம் வாங்கவும், என்ற இணையதளத்தில் பொதுமக்கள் நிதி அளித்து உதவுமாறு பிரச்சாரம் செய்யப்படுகிறது.

உக்ரைன் விமானிகளுக்கு தேவையான போர் விமானங்களின் வகைகள் அந்த இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதில் சு-22,சு-25, சு-27, சு-24 மற்றும் மிக்-29 போன்ற போர் விமானங்கள் அடங்கும். ஒரு விமானத்தின் விலை சுமார் 2.5 கோடி டாலர்கள் என இணையதளம் மதிப்பிட்டுள்ளது.

இந்த பிரச்சாரம் மூலம், உக்ரைனில் ரஷ்ய துருப்புக்களின் முன்னேற்றத்தை தடுக்க, புதிய போர் விமானங்களை வாங்க பொதுமக்களிடம் இருந்து நிதி கோரப்படுகிறது.

“தயவுசெய்து எனக்கு ஒரு போர் விமானத்தை வாங்கித் தாருங்கள்” என்று பிரசார இணையதளத்தில் தடிமனாகவும் முழுவதுமாக எழுதப்பட்டுள்ளது.

மேலும் அந்த இணையதளத்தில் ஒரு காணொளி பதிவிடப்படுள்ளது.

அதில் ஒரு உக்ரேனிய விமானி போர் விமானங்கள் உட்பட அழிக்கப்பட்ட இராணுவ உபகரணங்களை நோக்கி நடந்து செல்கிறார்,

பின்னர் கேமராவைப் பார்த்து பேசுகிறார். “எனக்கு ஒரு போர் விமானத்தை வாங்கிக் கொடுங்கள். ரஷ்ய விமானங்களால் நிரப்பப்பட்ட எனது வானத்தைப் பாதுகாக்க இது எனக்கு உதவும்.

ரஷ்ய விமானங்கள் என் நிலத்தில் குண்டுவீசி, என் நண்பர்களைக் கொன்று, நமது தோழர்களையும், நான் அறிந்த அனைத்தையும் அழிக்கின்றன.