தூக்கமின்மைக்கு தீர்வாகும் பழம்

பொதுவாகவே நிம்மதியான தூக்கம் அனைவருக்கும் இன்றியமையாதது. இரவில் சரியாக தூங்காவிட்டால் மறுநாள் செய்யும் வேலைகளில் முழுமையான ஈடுபாடு இருக்காது.

தூக்கம் இன்மை பிரச்சினை உடல் ஆரோக்கியத்துக்கு மாத்திரமன்றி உள ஆரோக்கியத்திலும் பாரிய தாக்கம் செலுத்துகின்றது.

நன்றாக தூங்கினால்தான் காலையில் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும். ஆனால் சிலருக்கு மனஅழுத்தம் மற்றும் மிகை சிந்தனை காரணமாகவும் சிலருக்கு கெட்ட கனவுகள் காரணமாகவும் உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் காரணமாகவும் இரவில் சரியான தூக்கம் வருவதில்லை.

படுக்கையில் படுத்ததும் சில நிமிடங்களில் தூங்குவதெல்லாம் சிலர் வாங்கி வந்த வரம் என்றும் சொல்லுமளவிற்கு தூக்கமின்மை பிரச்சனை உலகம் முழுவதும் வியாபித்து காணப்படுகின்றது.

நாம் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க தூக்கம் என்பது நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. நம்முடைய ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் தினசரி இரவு போதுமான நேரம் தூங்குவது மிக அவசியமாகின்றது.

அந்த வகையில் தூக்கமின்மை பிரச்சினைக்கு வாழைப்பழம் சிறந்த தீர்வு கொடுக்கும் என அறிவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றது. இது குறித்து முழுமையாக விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

தூக்கமின்மைக்கு தீர்வாகும் வாழைப்பழம்

வாழைப்பழங்களில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிகளவில் செறிந்து காணப்படுவதால் சிறந்த தூக்கத்துக்கு துணைப்புரியும்.

வாழைப்பழங்களில் காணப்படும் மேற்கண்ட 2 மினரல்ஸ்களும் தசைகளை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. அதே போல வாழைப்பழங்களில் உள்ள tryptophan என்ற அமினோ ஆசிட் மூளையை அமைதிப்படுத்துகின்றது. இதனால் ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்துகின்றது.

அதுமட்மன்றி சிறந்த தூக்கத்திற்கு உதவும் மெலடோனின் உற்பத்தியை வாழைப்பழங்கள் ஊக்குவிப்பதாகவும் Sleep Charity தகவல் தெரிவித்துள்ளது.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள் இரவில் படுக்கைக்கு செல்லும் முன்னர் வாழைப்பழத்தை உண்பதால் சிறந்த தூக்கத்தை பெற பெரிதும் துணைப்புரியும்.