மணி பிளாண்ட் செடியை வளர்க்க போறீங்களா?.. இந்த பதிவு உங்களுக்கே

தற்போது வீடுகளில் அதிகமாக வளர்க்கப்படும் செடிகளில் ஒன்று தான் மணி பிளாண்ட். கொடிவகை செடியான இவை பல வீடுகளில் செழிப்பாக வளர்ந்து நிற்பதை காணலாம்.

அதிர்ஷ்டம் தரும் செடியாக கருதப்படும் மணி பிளாண்ட் சொத்து, சுகம், ஆரோக்கியம் மற்றும் சந்தோஷத்தை பெருகச் செய்யும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது.

ஆம், ஃபெங் சூயி சாஸ்திரப்படி அதிர்ஷ்டம் ஏற்படுத்தி கொடுக்கும் செடியாக கருதப்படுவதுடன், பண வளத்தையும் பெருகச் செய்யும் வாய்ப்பை கொடுக்கின்றது.

வீட்டிற்கு வெளியே மட்டுமின்றி வீட்டிற்குள்ளும் வளர்க்கப்படும் இந்த மணி பிளாண்ட் குறித்து பல விடயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

மணி பிளாண்ட்டின் சுவாரசியமான தகவல்
வீட்டில் சிறிய தொட்டியில் வளர்க்கப்படும் சுமார் 10 முதல் 15 அடி உயரத்தில் வளர்கின்றது. ஆனால் காடுகளில் வளரும் மணி பிளாண்ட் 50 லிருந்து 60 அடி உயரம் வளருமாம்.
பளிச்சென்று பச்சை நிறத்தில் பளபளவென இருக்கும் ஒவ்வொரு கிளைகளிளும் 12 இன்ச் நீளத்தில் 5 இலைகள் வளருமாம்.
இந்த செடியில் உள்ள க்ரீமி வெண்ணிற பூக்களின் வீரியமிக்க வாசனை தேனீக்கள், வௌவால்கள், பட்டாம்பூச்சி இவற்றையும் ஈர்க்குமாம்.
இந்த செடியில் விதைகள் உள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் இந்த செடியின் விதைப்பையில் இருக்கும் விதைகள் பெரிதாகி பின்பு வெடித்து கீழு விழுமாம்.

அதாவது ஃபெங் சூய் சாஸ்திரப்படி, இதில் இருக்கும் ஐந்து இலைகள் ஐந்து சின்னங்களை குறிக்குமாம். உலோகம், கட்டை, நீர், நெருப்பு மற்றும் பூமி என்பவையாகும்.
இதன் கொழுந்து இலைகள் மற்றும் பூக்களை காய்கறி போன்று சமைத்து சாப்பிடலாமாம்.
இலைகளை மட்டுமின்றி இதன் விதையையும் சாப்பிடலாம். இதன் சுவை கடலை பருப்பு போன்று இருக்கும் நிலையில், இதனை வறுத்து நொறுக்குத்தீனியாக சாப்பிட்டு வருகின்றார்களாம்.