தினமும் 2 ஆப்பிள் சாப்பிட்டால் கொலஸ்ட்ரோலில் இருந்து தப்பிக்கலாம்

இன்றைய காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை நோய்க்கு பாதிக்கப்படுவது அறிதே. தற்போது கொலஸ்ட்ரால் நோயானது பெரியவர்களுக்கு மாத்திரமல்ல சிறியவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கொலஸ்ட்ரால் நோயானது வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அப்படி கொலஸ்ட்ரோலால் அவதிப்படுபவர்கள் தினமும் இரண்டு ஆப்பிள் பழம் சாப்பிட்டால் எத்தனை நன்மைகள் தெரியுமா?

கொலஸ்ரோலுக்கு ஆப்பிள்
கொலஸ்ட்ரோல் இருப்பவர்கள் தினமும் 2 ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரோலை 40 சதவீதம் குறைக்கலாம் என அறிக்கையில் சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பவதையும் குறைக்கிறது.

ஆப்பிள் சாப்பிடுவதால் இரத்த நாளங்களைத் தளர்த்தி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் ஆப்பிள் பழத்தில் பாலிபினால்கள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகம் நிறைந்திருக்கிறது.

இது உடலில் படிந்திருக்கும் கொலஸ்ட்ரோலை அகற்றி இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

ஆப்பிள் பழத்தில் இருக்கும் நார்சத்து கொழுப்பு அமிலங்களை உற்பத்தியாக்குகிறது. இதனால் கல்லீரலில் உற்பத்தியாகும் கொழுப்பின் அளவானது கட்டுப்படுத்தப்படும்.

ஆப்பிளில் இருக்கும் அதிகமான சத்துக்கள் உடலில் இருக்கும். அதிகமான கொலஸ்ட்ரோலை அகறற்றி தமனிகளின் வேலையை எளிதாக்குகிறது.

ஆப்பிளை சாப்பிடுவதனால் இதயம் பலமாக மாறுகிறது.