நாட்டு மக்களை எச்சரிக்கும் மத்திய வங்கி ஆளுநர்

நாட்டில் கிறிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் நாணய அலகு சட்ட ரீதியானதல்ல என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க(Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கிறிப்டோ நாணயம் அதிகமாக பயன்படுத்தப்படுவதில்லையெனவும் இந்த நாணய அலகு பயன்பாட்டில் ஆபத்து காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏமாற்றப்பட்டுள்ள பொதுமக்கள்

கிறிப்டோ நாணயங்களில் முதலீடு செய்த சிலர் நட்டமடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான முதலீடுகளின் மூலம் சிலர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.