பிரபு நிரகாரித்த கதையில் நடித்த விஜயகாந்த்

விஜயகாந்த்
நடிகர் விஜயகாந்த் சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் கடின உழைப்பால் முன்னணி இடத்தை பிடித்தார். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் தோல்வியை தான் தழுவியது.

இவருடைய முதல் ஹிட் படம் என்றால் அது சட்டம் ஒரு இருட்டரை திரைப்படம் தான். இப்படத்தை விஜய்யின் தந்தை SA சந்திரசேகர் இயக்கி இருப்பார்.

பேட்டி
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சந்திரசேகர் சட்டம் ஒரு இருட்டரை படம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், சட்டம் ஒரு இருட்டரை படத்தின் கதையை முதல் முதலில் நடிகர் பிரபுவிடம் கூறினேன். ஆனால் அந்த கதை பிடிக்கவில்லை.

அதன் பின் பெங்களூரில் இருந்து ஒருவரை வரவழைத்து 3 முறை டெஸ்ட் செய்து பார்த்தோம். ஆனால் அவரும் செட் ஆகவில்லை. கடைசியில் தான் விஜயகாந்த் இந்த படத்தில் ஒப்பந்தம் ஆனார் என்று எஸ்.எ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.