மின்சாரம் தாக்கியதில் 19 வயது இளைஞன் பலி!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருமலை வீதியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவர் தனது வீட்டில் வைத்து மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார் .

சம்பவத்த்தில் திருமலை வீதியை வசிப்பிடமாகக் கொண்ட சசிக்குமார் டினேஸ் எனும் இளைஞனே உயிரிழந்தவராவார்.

திங்கட்கிழமை (08 ) தனிமையில் இருந்து தனது வீட்டில் வெல்டிங் – இரும்பு ஒட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கப்பட்டு மயக்க நிலையில் இருந்துள்ளார்.

பின்னர் தனது சகோதரி மற்றும் அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் இன்று செவ்வாய்கிழமை (09) உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மடடக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.