தீச்சட்டியுடன் நடிகர் கஞ்சா கருப்பு

நடிகர் கஞ்சா கருப்பு தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர். அவர் வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார்.

ஆனால் அந்த படம் படுதோல்வி அடைந்ததால் சொத்துக்களை இழந்து வாடகை வீட்டுக்கு செல்லும் நிலைமைக்கு வந்துவிட்டார்.

தீச்சட்டி
இந்நிலையில் இன்று கஞ்சா கருப்பு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அக்னிசட்டி உடன் வந்து வழிபாடு நடத்தினார்.

தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என சொல்லி வேண்டுதலுடன் அக்னிசட்டி எடுத்து வந்ததாக கஞ்சா கருப்பு அதன் பின் பேட்டி கொடுத்து இருக்கிறார்.