கொட்டும் மழையில் மின்னல் வேகத்தில் தங்கையை பாதுகாத்த அண்ணன்! வெளியான வீடியோ…!!

கொட்டும் மழையில் தங்கையை நனையாமல் பாதுகாப்பதற்கு அண்ணன் செய்த செயல் இணையத்தில் காணொளியாக வைரலாகி வருகின்றது.

பொதுவாக அண்ணன், தங்கை பாசம் என்றால் அது வேற லெவல் என்றே கூறலாம். ஆனால் சில வீடுகளில் இவர்களுக்குள் ஏற்படும் சண்டையினை தீர்த்து வைப்பதற்கு தாய் தந்தையர் படும் அவஸ்தையை அனுபவிக்கின்றனர்.

அவ்வாறு சண்டையிட்டுக்கொள்ளும் அண்ணன் தங்கைக்கு அருமையான பாடம் புகட்டும் காட்சியே இதுவாகும். ஆம் கொட்டும் மழையில் தனது தங்கையை நனையாமல் காரில் அமர வைப்பதற்கு, சிறுவன் ஒருவன் தான் அணிந்திருந்த டீ சர்ட்டின் உள்ளே தங்கையை வைத்து மின்னல் வேகத்தில் பாதுகாத்துள்ளார். இக்காட்சியினை 2 மில்லியனுக்கு மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.