பிரித்தானியாவில் குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யார்க்ஷயர் மற்றும் நார்த் வேல்ஸ் ஆகிய பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் இரண்டு அம்பர் வானிலை எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் பனிப்பொழிவுக்கான நான்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில், இந்த செய்தி வெளியாகியுள்ளது.

இதன்படி தேவைப்பட்டால் மாத்திரம் வெளியே செல்லுமாறு பரிந்துறைத்துள்ளனர். கிரேட்டர் மான்செஸ்டர் மற்றும் யார்க்ஷயரில் உள்ள எம்62 நெடுஞ்சாலையில் கடும் பனி காரணமாக ஓட்டுநர்கள் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவித்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

வடமேற்கு வேல்ஸ் மற்றும் வடக்கு இங்கிலாந்தில் எளிதாக 50 மைல் வேகத்தில் காற்று 30 முதல் 40 செ.மீ வரை பனியுடன் மோதும் போக்கில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல் வடமேற்கு வேல்ஸ் மற்றும் வடக்கு இங்கிலாந்தில் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.