ப்ளிப்கார்டில் விற்பனை – நத்திங் போன் 2 இந்திய வெளியீடு உறுதி!

நத்திங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் போன் 2 மாடல் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் அமெரிக்க சந்தையில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில், தற்போது இதன் இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது.

கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் போன் 1 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய போன் 2 அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய நத்திங் போன் 2 மாடலில் தலைசிறந்த அம்சங்கள் மற்றும் அதிகளவு அப்டேட்கள் செய்யப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. இந்திய சந்தையில் நத்திங் போன் 2 மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

புதிய நத்திங் போன் 2 மாடல் பிரீமியம் பிரிவில் களமிறங்க இருக்கிறது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. அந்த வகையில், இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படலாம்.

சமீபத்தில் தான் இந்த ஸ்மார்ட்போனின் சர்வதேச வெளியீட்டுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருந்தது. அதன்படி சர்வதேச வெளியீட்டின் போதே இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்த மாடலிலும் முந்தைய போன் 1 மாடலில் வழங்கப்பட்டு இருந்ததை போன்று பிரத்யேக எல்இடி க்லிம்ஃப் டிசைன், சிவப்பு நிற எல்இடி இண்டிகேட்டர் உள்ளிட்டவை வழங்கப்படும் என்றே தெரிகிறது.