சூப்பர் சிங்கர் 9 வெற்றியாளர் அருணா வாழ்க்கையில் இப்படி ஒரு கஷ்ரமா

சூப்பர் சிங்கர் 9
விஜய் தொலைக்காட்சியில் 15 வருடங்களுக்கு மேல் புத்தம் புதிய சீசன்களோடு ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜுனியர், சீனியர் என இரண்டும் நிறைய சீசன்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது.

இந்த 9வது சீசனோடு Media Mason தயாரிப்பு நிறுவனம் விலகுகிறார்களாம், அவர்களுக்கு பதிலாக Global Villagers இனி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தயாரித்து நடத்த இருக்கிறார்களாம்.

கடைசியாக பெரியவர்களுக்கான 9வது சீசன் முடிவுக்கு வந்துள்ளது, அதன் வெற்றியாளராக அருணா ஜெயித்துள்ளார்.

அருணா எமோஷ்னல்
வெற்றிப்பெற்றுள்ள அருணா ஒரு சோகமான விஷயத்தை கூறியிருந்தார். அவர் பேசும்போது, சூப்பர் சிங்கருக்கு வரும் முன்னர் நான் நிறைய மேடைகளில் பாடி இருக்கிறேன், அப்போதெல்லாம் நீங்கள் என்ன சாமி என்பதை தான் முதலில் கேட்பார்கள்.

எனது சாதியை சொல்லிவிட்டால் எனக்கு அடிக்கடி பாட வாய்ப்புகள் கிடைக்காமல் போகும் என்ற பயத்தில் அவர்களை தவிர்த்திருக்கிறேன். போகும் இடமெல்லாம் இதையே கேட்பார்கள், அதற்கு பயந்தே வீட்டில் முடங்கிய நாட்களும் உண்டு.

இந்த சூப்பர் சிங்கர் வெற்றி தான் நான் அவர்களுக்கு கொடுக்கும் பதில், இனி என்னால் உலகின் எந்த மூலைக்கும் சென்று பாட முடியும் என்கிற நம்பிக்கை வந்துள்ளது என பேசியுள்ளார்.