20 நாட்களில் போர் தொழில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

போர் தொழில்
அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவான படம் தான் போர் தொழில். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நிகிலா விமல் நடித்திருப்பார்.

சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இப்படம் தமிழ் நாட்டை தாண்டி கேரளாவிலும் நல்ல வசூல் செய்து வருகிறது.

வசூல்
இந்நிலையில் 20 நாட்களில் போர் தொழில் படம் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் இப்படம் ரூ 32 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.