பெண் ஒருவரின் கையில் வளர்ந்த மூக்கு!

மூக்கின் பெரும்பகுதியை இழந்த பெண்ணின் கையிலேயே மூக்கை வளரவைத்து பிறகு முகத்தில் பொருத்தி மிக பெரிய இன்ப அதிரச்சியை பிரான்ஸ் மருத்துவர்கள் கொடுத்துள்ளனர்.

பிரான்ஸ் – டௌலோஸ் நகரைச் சேர்ந்த பெண் ஒருவ நாசி குழி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

புற்றுநோயை குணமாக்க அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் காரணமாக மூக்கின் பெரும்பகுதியை இழந்துள்ளார்.

பிரான்ஸ் மருத்துவர்கள் சாதனை
பல ஆண்டுகள் மூக்கின் பாதிப்பகுதி இல்லாமல் அவதியுற்ற பெண்ணுக்கு பிரான்ஸ் மருத்துவர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

டெக்னாலஜியால் குறித்த பெண்ணின் சொந்த கையிலேயே மூக்கை வளர்த்து அதனை அந்த அவரக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதித்துள்ளனர்.

3டி பிரிண்டிங் பயோமெட்டீரியல் முறைமூலம் மூக்கின் குருத்தெலும்பை உருவாக்கியுள்ளனர்.

இரண்டு மாதங்கள் கையில் வளர்ந்த மூக்கு
அதை பெண்ணின் கையில் பொருத்தி, நெற்றிலியிலிருந்து சிறிது தோல்பகுதியை எடுத்து அதில் வைத்து வளர்த்துள்ளனர்.

இந்த இணைப்பு மூக்கானது இரண்டு மாதங்கள் பெண்ணின் கையில் வளர்ந்துள்ளது. முழுதாக வளர்ந்த பிறகு அதனை மருத்துவர்கள் முகத்தில் பொருத்தியுள்ளனர்.

இந்த தகவல் உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.