நேற்று நடந்த அரையிறுதியில் இகா ஸ்வியாடெக், ரஷிய வீராங்கனை டாரியா கசட்கினாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக், ரஷிய வீராங்கனை டாரியா கசட்கினாவுடன் மோதினார்.
இந்த போட்டியில் இகா ஸ்வியாடெக் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் டாரியாவை எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் கோகோ கோவ், இத்தாலியின் மார்ட்டினா டிடெவிசன் ஆகியோர் மோதினர். இதில் கோகோ கோவ் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று இறுதிப்ப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை கோகோ கோவ் ஆகியோர் மோத உள்ளனர்.