இந்தியாவில் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்ட ஈழத்தமிழ் அகதி உயிரிழப்பு!

சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழ் அகதி கிருஷ்ணமூர்த்தி இன்று (2024.01.28) மரணமடைந்துள்ளார்.

சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சிறப்புமுகாம் 1990ல் கலைஞர் கருணாநிதி அரசால் ஆரம்பிக்கப்பட்டது.

அப்போது தம்மை விடுதலை செய்யுமாறு கேட்டு போராடிய அகதிகளை பிரியாணி கேட்டு போராடினார்கள் எனக்கூறி கலைஞர் உத்தரவில் பொலிஸ் தேவாரம் இரு அகதிகளை சுட்டுக்கொன்றார்.

அதன்பின் ஜெயா அம்மையார் ஆட்சியில் பல அகதிகள் இச் சிறப்புமுகாமில் இறந்துள்ளனர்.

ஆனால் இதுவரை இச் சிறப்புமுகாம் என்னும் மரணவதை முகாமை மூட தமிழக அரசு முன்வரவில்லை.

வந்தாரை வாழ வைக்கும் என நம்பி தமிழ்நாட்டிற்கு வந்த ஈழ தமிழ் அகதிகளை இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழக அரசு சிறப்புமுகாமில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்போகிறது