மக்களிடம் மன்னிப்பு கோரிய கனேடிய இரத்த வங்கி!

கனடிய இரத்த வங்கி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.

குறிப்பாக மாற்றுப் பாலின சமூகத்தினரிடம் இவ்வாறு மன்னிப்பு கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாற்றுப் பாலின சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் இரத்த தானம் செய்வது தொடர்பில் கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட சட்டங்களுக்காக இவ்வாறு மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.
ஓர் பாலின ஆண்கள் இரத்த தானம் செய்வதற்கு நீண்ட காலமாக கனடாவில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இரத்த தானம் செய்யக் கூடிய சகல தகுதிகள் இருந்தும் இந்த தடை காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து மாற்றுப் பாலின சமூகத்தைச் சேர்ந்த அனைவரிடமும் மன்னிப்பு கோருவதகாத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்கையினால் ஒர் பாலினச் சமூகத்தினர் உள்ளிட்ட மாற்றுப் பாலின சமூகம் எதிர்நோக்கிய பாதிப்புக்களுக்காக கனடிய இரத்த வங்கி மன்னிப்பு கோரியுள்ளது.

1992ம் ஆண்டிலிருந்து கனடாவில் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் இரத்த தானம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

எவ்வாறெனினும், மாற்றுப் பாலினத்தவர்கள் இரத்த தானம் செய்வதில் தொடர்ந்தும் பல்வேறு கட்டுப்பாடுகள் காணப்படுவதாக மாற்றுப் பாலின ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.