முல்லைத்தீவில் ஜயர் ஒருவர் வெட்டி கொலை!

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் ஐயர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் முல்லைத்தீவு சிலாவத்தையில் மரண கிரியைகள் செய்யும் அப்புத்துரை வேலாயுதம் (டிஸ்கோ ஐயர்) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் விசாரணை
அதேவேளை யாழ் நெடுந்தீவில் ஐவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் முல்லைத்தீவில் ஐயர் கொல்லப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐயர் கொல்லபப்ட்டமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடபில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அண்மைகாலமாக தமிழ்ர் பிரதேசங்களில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.