கிளி மீது பொலிஸ் புகாரளித்த நபர்!

இந்திய மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் ஷிவாஜி நபர் பகுதியைச் சேர்ந்த 72 வயது சுரேஷ் ஷிண்டேவின், அயல் வீட்டைச் சேர்ந்த அக்பர் அம்ஜத் கான் வீட்டில் வளர்த்த கிளிமீது சுரேஷ் ஷிண்டே புகார் அழித்துள்ளார்.

இந்நிலையில், அந்தக் கிளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுரேஷ் ஷிண்டே, பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சுரேஷ் ஷிண்டே கூறியதாவது, “கிளியின் அலறல் சத்தம் தனக்குத் தொந்தரவாக உள்ளது என அக்பர் அம்ஜத்கானுக்கு கூறியும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கிளி மீதும் அவர் மீதும் பொலிஸில் புகார் அளித்துள்ளேன்” என கூறியுள்ளார்.

இதையடுத்து சட்டவிதிகள் படி கிளியின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.