பிரான்ஸ் தலைநகர் வீதிகளில் படுத்துறங்குபவர் எண்ணிக்கை அதிகரிப்பு!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வீதிகளில் படுத்துறங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விடயம் புதிதாக வெளியான கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அண்மைய தரவுகளின் படி, பரிசில் 3,015 பேர் வீடுகளின்றி வீதிகளில், பூங்காக்களில், மெற்றோ சுரங்கங்களில் படுத்துறங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aubervilliers, Saint-Ouen, Saint-Denis, Courbevoie, Nanterre, Issy-les-Moulineaux போன்ற நகரங்களையும் சேர்த்து மொத்தமாக 3,633 பேர் இதுபோல் வீதிகளில் உறங்குகின்றனர்.

அதேவேளை, கடந்த 2022 ஆம் ஆண்டு 2,598 பேர் வீதிகளில் படுத்து உறங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் 16 சதவீதம் அதிகமாகும்.