உலகமே கொரோனாவை பார்த்து ஓட…. பொழுதை இன்பமாக கழிக்க….!! தட்டுப்பாடான பாதுகாப்பு கவசம்..

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து வருகின்றனர். இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் வெளிப்பட துவங்கியது.

இதனையடுத்து நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டினை விட்டு வெளியே வர வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுதும் 190 க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்டிப் படைத்து வருகின்றது.

இதன் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளது. வியாபாரங்கள் முடக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மலேசியாவில் பெருமளவில் பரவி இருப்பதால் அங்கு உற்பத்தியாகும் ஆணுறை தயாரிக்கும் தொழிற்சாலை மூடப்பட்டுவிட்டது. இதன் காரணமாக அந்த நாட்டில் ஆணுறை தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனைப்போன்று மும்பையிலும் காண்டம் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.