காதல் ஜோடிகள் செய்த முகம் சுழிக்கும் செயல்: பைக்கில் செல்லும் போதே இப்படியா?

காதல் ஜோடிகள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில், கட்டிப்பிடித்துக் கொண்டே பைக் ஓட்டிக் கொண்டு சென்ற காதல் ஜோடி ஒன்று, முத்தமிட்டுக்கொண்டு முகம் சுழிக்கும் வகையில் நடந்துள்ளனர்.

அதாவது, காதலன் அந்த பைக்கை ஓட்டிச் செல்ல, அந்த பைக்கில் காதலனுக்கு முன் பகுதியில் இளம் பெண் ஒருவர் அமர்ந்து கொண்டு, அவரை கட்டியணைத்து முத்தமிட்டுக்கொண்டே பைக்கை ஓட்டிச் சென்றுள்ளனர்.

இதனை அப்பகுதி மக்கள் காணொளியாக எடுத்தது மட்டுமின்றி, குறித்த ஜோடிகளை தடுத்து நிறுத்தி எச்சரித்துடன் காவல்துறையினருக்கு தெரிவிக்க முயன்றுள்ளனர்.

பின்பு திகைத்துப் போன காதல் ஜோடி ஊர் மக்களிடம் “இனி நாங்கள் இந்த பக்கமே வரமாட்டோம், இது போன்று நடந்து கொள்ளவும் மாட்டோம்” என்று, அவர்களிடம் கெஞ்சி மன்னிப்பு கேட்டுவிட்டு, அங்கிருந்து சென்றுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.