கர்ப்பப்பை பிரச்சினையால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லையா?

15 வயது 35 வயது வரை பெண்கள் கர்ப்பபைப் பை சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். இந்த காலத்தில் உணவுமுறைகளால் இந்த பிரச்சினை பெண்களிடையே அதிகமாகவே காணப்படுகிறது.

மாதவிலக்கு சரியாக வராததால் பெண்கள் அவ்வப்போது மருத்துவர்களிடம் சென்று மாத்திரைகளை சாப்பிடுகிறார்கள். இன்னும் சில பேருக்கு வயிற்றில் நீர்க்கட்டிகள் இருக்கின்றன.

இந்தப் பிரச்சினைகளால் பல பெண்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போய்விடுகிறது.

பெண்களின் இந்த பிரச்சினைக்கு கடவுள் தந்த ஒரே பொக்கிஷம் கழற்சிக்காய். நம்மில் எத்தனை பேருக்கு கழற்சிக்காய்யை பற்றி தெரியும். உடம்பில் ஏதேனும் சின்ன பிரச்சினை இருந்தால்கூட டாக்டரிடம் சென்று ஐநூறு, ஆயிரத்தை கொட்டிவிட்டு வருகிறோம்.

ஆனால் நம் கண்ணுக்கு அருகில் இருக்கும் நாட்டு மருந்து கடைகளை மறந்து விடுகிறோம். இயற்கை மருந்தை எடுத்துக்கொள்ளும்போது நமக்கு உடம்பில் எந்தவித பக்க விளைவுகள் ஏற்படாது. உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

குழந்தை இல்லாமல் பெண்கள் வீட்டிலும், சமூகத்திலும் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். பல அவமானங்களுக்கு உட்படுகிறார்கள். இப்படிப்பட்ட பெண்கள் இனி அஞ்ச வேண்டாம். தைரியமாக கழற்சிக்காயை சாப்பிட்டு வந்தால் விரைவில் உங்களுக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும். கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பலவிதமான பிரச்சினைகளை சரியாகும்.

நீர்க்கட்டி அகற்ற எப்படி கழற்சிக்காயை பயன்படுத்தலாம் என்று இப்போது பார்ப்போம்:கழற்சிக்காயை காய வைத்து அதன் ஓடுகளை முதலில் நீக்க வேண்டும்.

பின்னர் உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அம்மியிலோ அல்லது மிக்ஸியிலையோ பொடி செய்ய வேண்டும்.

4 பங்கு கழற்சிக்காய் பொடிக்கு ஒரு பங்கு மிளகு பொடியுடன் சிறிதளவு தேன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த உருண்டைகளை தினமும் காலை, மாலை உணவுக்கு முன்பு சாப்பிட்டு வந்தால் விரைவில் மாதவிலக்கு பிரச்னை சரியாகும்.

கர்ப்பபையில் உள்ள நீர்க்கட்டிகள் உடைந்து போகும்.

கழற்சிக்காயில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக கட்டிகளை கூட இந்த கழற்சிக்காயை கரைத்துவிடும்.