தினமும் சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? வெளியான அதிர்ச்சி தகவல்

தினமும் சாதம் சாப்பிடுவதால் அதிக அளவில் சர்க்கரை நோய் வரும் என்று பலர் சொல்வதை கேட்டிருக்கிறோம். ஆனால் எந்த உணவும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாதான் ஆகும்.

சாதம் சாப்பிடலாம். ஆனால் எப்படி சாப்பிடுகிறோம் அதுதான் முக்கியம். எப்போதுமே சாதத்தை கஞ்சி வடித்துதான் சாப்பிட வேண்டும். குக்கரில் வேக வைத்த சாதத்தை சாப்பிடவே கூடாது.

அப்படி குக்கரில் சாதம் வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அந்த காலத்தில் உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. அதனால் நம் முன்னோர்கள் சாதத்தை வடித்து சாப்பிட்டார்கள். அதில் மிஞ்சும் கஞ்சியையும் உண்டார்கள். ஆனால் அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள்.

ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் உடல் உழைப்பு மிகவும் குறைந்து விட்டது. அதனால் சாதத்தை கூட அளவாகதான் சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிட்டால் கூட உடல் எடை கூடும்.

குக்கரில் செய்யப்படும் உணவில் ஸ்டார்ச் சாதத்துடன் தங்கிவிடுகிறது. இதனால்தான் சர்க்கரை வியாதிகாரர்களுக்கு குளுக்கோஸ் அதிகரித்து விடுகிறது.

சாதத்தில் தண்ணீர் ஊற்றி, மறுநாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தரும். இந்த கஞ்சி அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் ஆகியவை பாதிக்காமல் பாதுகாக்கும். வாரத்திற்கு 2 முறை இப்படி நீங்கள் சாதக் கஞ்சியை சாப்பிடலாம்.

சாதம் வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம், ஆகியவை சரியாகும். ஆனால், கஞ்சியை ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும். சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப் பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும்.

பழையச் சோறு சாப்பிட்டுத்தான் நம் முன்னோர்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள். பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது. மோரைக் கடைந்து ஊற்றி சாப்பிட வேண்டும்.

சாதம் வெதுவெதுப்பாக இருக்கும் போது பசும்பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர்த் தாகம் ஏற்படுவதும், பித்தம் உண்டாவதும் நீங்கும். பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச் சாப்பிட வாதம், பித்தம் நீங்கும். மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கிவிடும். வாதம், பித்தத்தையும் தணிக்கும்.