யாழில் முச்சக்கர வண்டி மீது வன்முறைக் கும்பல் தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் இருந்து ஆவரங்கால் பகுதியை நோக்கி பயணித்துக்கொண்டிந்த முச்சக்கர வண்டி ஒன்றை, வன்முறை கும்பல் வீதியில் இடைமறித்து தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தப்பியோடிய வன்முறை கும்பல்
வன்முறை கும்பல் முச்சக்கர வண்டி சாரதியை தாக்க முற்பட்ட வேளை , சாரதி அவல குரல் எழுப்பவே அயலவர்கள் கூடியதால், தாக்குதலை நடத்தியவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

சம்பவத்தில் முச்சக்கர வண்டியின் முன் பக்க கண்ணாடி முற்றாக சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டியின் சாரதி அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றசெயகளை தடுக்க பொலிஸாருக்கு சிறப்பு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், முச்சக்கரவண்டியை மறித்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.