சஞ்சய் அறிமுக படத்தில் இந்த வாரிசு நடிகரை தான் இயக்க போகிறாரா

ஜேசன் சஞ்சய்
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

தனது தந்தையை போலவே நடிகராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகர் போல் தானும் ஒரு இயக்குனராக போகிறேன் என முடிவு செய்துள்ளார். படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு வந்தும் கூட, சஞ்சய் இப்படியொரு முடிவு எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் துணை இல்லாமல் சஞ்சய் தனது அறிமுக படத்தின் வாய்ப்பை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் தனது மகனின் படத்தை பற்றி பொதுவெளியில் விஜய் எதுவுமே பேசவில்லையே என்றும் சிலர் கூறுகிறார்கள். இந்நிலையில் சஞ்சய் இயக்கப்போகும் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

சஞ்ஜய் படத்தின் ஹீரோ
இப்படத்தின் ஹீரோ குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை. ஆனால், கவின் போன்ற இளம் நடிகர்களின் பெயர் இந்த லிஸ்டில் அடிபட்டது.

ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவல் என்னவென்றால், இப்படத்தில் ஹீரோவாக நடிக்க மலையாள நடிகர் துல்கர் சல்மானிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். கிட்டத்தட்ட இது உறுதியாகிவிடும் என்கின்றனர். முதல் படத்திலேயே சஞ்சய்க்கு துல்கர் போன்ற முன்னணி நட்சத்திரத்தை இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.