இளம் பெண்ணுடன் முத்தமழை பொழியும் சிம்பன்சி

இன்றைய உலகில் இணையத்தில் வெளிவரும் காணொளிகள் பார்வையாளர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது.

அந்த வகையில், ஜீன்ஸ் அணிந்த சிம்பன்சி ஒன்று பெண் ஒருவருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிம்பன்சிகள் என்னும் மனித குரங்குகள் என்றுமே மனிதர்களை போலவே நடந்து கொள்பவை. குறித்த காட்சியில் சிம்பன்ஸி ஒன்று சௌமியா என்ற பெண்ணிடம் மிகவும் ரொமான்ஸாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் முத்தமழையையும் பொழிந்து வருகின்றது. குறித்த காட்சியானது தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சஃபாரி வேர்ல்டுக்கு சென்று சௌமியா சந்திரசேகரன் என்ற பெண் எடுத்ததாகும்.

குறித்த பெண் இக்காட்சியை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நிலையில், மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் ரசித்துள்ளதுடன், லட்சக்கணக்கான லைக்ஸும் குவிந்து வருகின்றது.