குழந்தை பெற்ற பின்பு கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க செய்த சாயிஷா

நடிகை சாயிஷா திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பின்பு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார்.

நடிகை சாயிஷா
தமிழில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய வெளியான ‘வனமகன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் சாயிஷா.

இந்த படத்தை தொடர்ந்து, ‘கடைக்குட்டிசிங்கம்’, ‘ஜூங்கா’ ‘காப்பான்’, போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

இந்நிலையில் ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கின்றார்.

கணவருடன் படத்தில் சாயிஷா
திருமணத்திற்கு பிறகு ஆர்யாவுக்கு ஜோடியாக ‘டெடி’ என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டுமே சாயிஷா தமிழில் நடித்தார்.

எனினும் அவ்வப்போது தன்னுடைய கியூட் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

தற்போதும் கிளாமர் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு, நான் 99% ஏஞ்சல், ஆனால் அந்த ஒரு சதவீதம் என்று கேள்வி எழுப்பி ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமாகி குழந்தை பெற்ற பின்பும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருவது ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.