பெண்கள் ஆபாச வீடியோக்கள் பார்ப்பது தாம்பத்திய உறவை பாதிக்கும்!

ஆபாச வீடியோக்கள் காண்பதால் உடல் மீதான பாதுகாப்பின்மை உணர்வு தோன்றுவதாகவும், இதனால் தாம்பத்திய உறவின் மீதான ஈடுபாடும் குறைகிறது.

பெண்கள் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதால் அவர்களுக்கு உடலுறவின் போது பாதுகாப்பற்ற உணர்வு தோன்றுவதாகவும், இதனால் முழு ஈடுபாட்டோடு செயல்பட முடியாமல் போகிறது என்று சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு உடலுறவு மீதான ஈடுபாடும் குறைகிறது என்கின்றனர்.

உமன்ஸ் ஹெல்த் ஜர்னலில் ஓர் ஆய்வு முடிவு வெளியிட்டுள்ளது. அதில், ஆபாச வீடியோக்களைப் பார்ப்பதால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆபாச வீடியோக்களை பெண்கள் பார்த்த பின் உடலுறவில் ஈடுபடும்போது, அந்த வீடியோக்கள் நினைவில் வந்து செல்கின்றன. இதனால் அவர்களுக்கு தான் இருக்கும் நிலை கருதி பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படுவதாக கண்டுபிடித்துள்ளனர். இதனால் அவர்களால் அந்த உடலுறவில் முழு ஈடுபாட்டோடு செயல்பட முடியாமல் போகிறது என்று ஆய்வில் கலந்து கொண்ட பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வில் 18 – 29 வயது கொண்ட 706 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆய்வின் முடிவில் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதால் ஆண் பெண் இருவருக்கும் ஏற்படும் அனுபவம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அதில் ”ஆண்கள் ஆபாச வீடியோக்கள் காண்பதால் உடலுறவில் ஈடுபடுவதற்கான தூண்டுதலாகவும், திருப்தையையும் ஏற்படுத்துகின்றன. பெண் அதில் வரும் காட்சிகளைக் கண்டு தன் உடல் மீதான பாதுகாப்பின்மை உணர்வு தோன்றுவதாகவும், இதனால் தாம்பத்திய உறவின் மீதான ஈடுபாடும் குறைகிறது ” என்கிறார் சூசன். இவர் விர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார்.

மேலும், ஆபாச வீடியோக்களில் அவர்கள் உடலுறவு கொள்வது போல, அப்படியே செய்ய வேண்டுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு எழுகிறது. இதனால் அவர்கள் முழுமையாக உடலுறவில் ஈடுபடுவதில்லை என்கிறார் சூசன்.