யாழில் கொடூரம் கற்பழித்து கொல்லப்பட்ட குடும்ப பெண்

யாழ்ப்பாணம் – மருதங்கேணி தாளையடி பகுதியில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூன்று பிள்ளைகளின் தாயான 44 வயதுடைய பெண்ணே இவ்வாரு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சடலம் அவர் வசித்து வந்த வீட்டின் கழிவறைக்கு முன் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பரிசோதனையில் தெரியவந்த தகவல்
உயிரிழந்த பெண்ணின் கணவர் மீன்பிடித் தொழிலுக்காக சென்று மீண்டும் வீடு திரும்பிய போது, வீட்டுக்கு அருகில் மனைவி கிடந்ததைக் பார்த்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அவர் மனைவியை பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்திருந்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலத்தை பிரேத பரிசோதனை செய்ததில், அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.