அக்காவாக நடிக்க பலகோடி கேட்ட நயன்

நயன்தாரா
நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதை தவிர்த்து கீத்து மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்சிக் திரைப்படத்தில் நயன்தாரா நடிக்கிறார் என தகவல் வெளியானது.

யாஷ் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தில் அவருக்கு அக்காவாக பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிக்கவிருந்தார். ஆனால், திடீரென அவர் வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக நயன்தாரா நடிக்க வைக்க இயக்குனர் கீத்து மோகன் தாஸ் முடிவு செய்துள்ளாராம்.

இரண்டு மடங்கு அதிக சம்பளம்
படத்தின் கதையை கேட்டு சரி என கூறியுள்ள நடிகை நயன்தாரா, இப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால் ரூ. 20 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டுள்ளாராம். குறிப்பாக படத்தில் அக்கா, தம்பிக்கு இடையிலான எமோஷனல் காட்சி வருகிறதாம். அதுதான் படத்தின் முக்கிய காட்சி என்கின்றனர்.

இவ்வளவு முக்கியதுவம் உள்ள கதாபாத்திரத்தில் நடிக்க ரூ. 20 கோடி சம்பளமாக கேட்டுள்ளார் நயன். கதாநாயகியாக நடித்து வரும் நயன்தாரா இதுவரை ரூ. 10 கோடி முதல் ரூ. 11 கோடி வரை சம்பளம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், முதல் முறையாக யாஷ் படத்திற்காக தன்னுடைய வழக்கமான சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக கேட்டுள்ளார் நயன்தாரா. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.