திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் திடீரென சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
கடந்த செப்டம்பர் 29ம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவணங்களை அனுப்பியிருந்த நிலையில், அதனை ஏற்ற தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் திடீரென சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு லேசான வயிறு வலி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.