13 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்

பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாலியல் தொல்லை
மயிலாடுதுறை, சேந்தங்குடியைச் சேர்ந்தவர் சீனிவாசன்(34). இவர் அங்கு பள்ளியில், இயற்பியல் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். மேலும், கூடுதலாக மாணவர்கள் விடுதியையும் கண்காணித்து வந்துள்ளார்.

இந்நிலையில், திருமணமாகாத இவர் அதே பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவனிடம் தன் பாலின ஈர்ப்புக்கு வற்புறுத்தியுள்ளார். பயத்தில் அந்த மாணவன் யாரிடமும் இதுகுறித்து கூறாமல் தனது தம்பியிடம் மட்டும் கூறியுள்ளார்.

ஆசிரியர் கைது
அவரது தம்பி உடனே பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து புகாரளித்ததில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து ஆசிரியர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த விஷயம் கேட்ட ஆசிரியர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயக்கத்தில் கிடந்த அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அவர் குணமடைந்ததும் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தெரியவந்தது.