தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்!

தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:- மயிலாடுதுறை மாவட்டம், கடலூர் கடலோர பகுதிகளில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும். முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து முடித்தபின் நிவாரண தொகை விவரம் அறிவிக்கப்படும். வீடுகளில் தண்ணீர் புகுந்தால் ரூ.4800 வழங்கப்படும் என ஏற்கெனவே விதி உள்ளது.

இதேபோல், பசு, எருமைகள் உயிரிழந்தால் ரூ.30 ஆயிரம் நிவராணம் வழங்கவும் விதி உள்ளது. மழையால் குடிசை முழுவதுமாக இடிந்திருந்தால் ரூ.5,000 வழங்கப்படும். தமிழகத்தில் மழை பாதிப்புகளால் கடந்த சில நாட்களில் 2 பேர் இறந்துள்ளனர்.