மலையகத்தின் பல பகுதிகளில் முட்டைக்கு தட்டுப்பாடு

அட்டன் உள்ளிட்ட மலையகத்தின் பல பகுதிகளில் முட்டைக்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முட்டைகளை சில்லறை மற்றும் மொத்த விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முட்டை உற்பத்தியாளர்கள் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்வதனால் தாமும் வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து விலகியுள்ளதாக முட்டை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.