அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர் ஒருவர் மேற்கொண்ட பதறவைக்கும் காரியம்

அவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் தனது ஆறு வயது மகன் மற்றும் நான்கு வயது மகளை கொலை செய்த பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளாதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் 4 வயதான மகளும், 6 வயதான மகனுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திக குணதிலகா எனும் இலங்கையரே தனது ஆறு வயது மகன் கோஹன் மற்றும் நான்கு வயது மகள் லில்லி ஆகியோரை கொலை செய்த பின்னர் தானும் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்துவந்த நிலையில் குழந்தைகளை தாயரிடம் ஒப்படைக்கவேண்டிய நாளில் அவர் , அவர்களை அனுப்பவில்லை என கூறப்படுகின்றது. இதனையடுத்து குழந்தைகளின் தாயார் பொலிஸாருக்கு அது குறித்து தகவல் தெரிவித்தாக உதவி ஆணையர் ஆலன் ஆடம்ஸ் தெரிவித்தார்.

பொலிஸார் இலங்கையரின் வீட்டுக்கு சென்றபோது அவரும் குழந்தைகளும் அங்கு சடலமாக கிடந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

அதேவேளை உயிரிழந்த இந்திக குணதிலகா, இலங்கை ஆண்களுக்கான சமூகக் குழுவான மேற்கு ஆஸ்திரேலியா றோயல் கல்லூரி பழைய ஆண்கள் சங்கத்தின் பாடகர் மற்றும் ஸ்தாபகக் குழு உறுப்பினராகவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் அந்நாட்டு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் அந்த தகவல்கள மேலும் தெரிவிக்கின்றன.