இப்படி ஒரு சோகமா?? குஷ்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

தமிழ் சினிமாவில் வருஷம் 16 என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை குஷ்பு.

ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, சத்யராஜ் என மாபெரும் நடிகர்களுடன் நடித்த இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் அன்று முதல் இன்று வரை இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும் கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்த இவர் நடிகரும் ,திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். அதனை தொடர்ந்து தற்போது சின்னத்திரை தொடரில் நடித்து வருகிறார்.மேலும் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தநிலையில் நடிகை குஷ்பு தற்போது ட்விட்டர் பக்கத்தில் சோகமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” எனது அண்ணன் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார், மருத்துவர்கள் அவரை காப்பற்ற போராடி வருகின்றனர் என சோகமான செய்தியை பதிவிட்டுள்ளார் நடிகை குஷ்பு.

அவரது பதிவிற்கு பிரபலங்களும், ரஸுகர்களும் நடிகை குஷ்புவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த சம்பவம் குஷ்பு குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் அணைத்து குஷ்பு ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.