உணவக ஊழியர்களால் தாக்கப்பட்ட தனியார் பேருந்து ஓட்டுநர்!

உணவகத்தில் தங்களை தாக்கியதாகக் கூறி, தனியார் பேருந்து ஓட்டுநர்களும், நடத்துனர்களும், உணவக மேலாளரை, தாக்கியதால் ஈரோட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள அமுதம் மெஸ் என்ற உணவகத்தில், தனியார் பேருந்து ஓட்டுநர் சங்கர் என்பவர் உணவருந்தி உள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் உணவக மேலாளர் விஜயகுமார் மற்றும் உணவக ஊழியர்கள் சேர்ந்து ஓட்டுநர் சங்கரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து சென்றுவிட்ட சங்கர், சிறிது நேரத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுடன் வந்து, உணகவ மேலாளர் விஜயகுமாரை தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த உணவக மேலாளர் விஜயகுமாரை, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆட்டோவில் மருத்துவனைக்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் தனியார் பேருந்து ஓட்டுநர்களும், நடத்துனர்களும் ஆட்டோவை செல்ல முடியாத படி சூழ்ந்துக் கொண்டு உணகவ மேலாளரை தாக்கியதால், விஜயகுமார் ஆட்டோவில் இருந்து இறங்கி உணவகத்திற்கு ஓட்டம் பிடித்தார்.

இதனைத்தொடர்ந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் உணவகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால், தடியடி நடத்திய போலீசார், நான்கு பேரை செய்துள்ளனர்.